/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீசிய காற்றில் கார் மீது விழுந்த மரம் உயிர் தப்பிய டிரைவர்
/
வீசிய காற்றில் கார் மீது விழுந்த மரம் உயிர் தப்பிய டிரைவர்
வீசிய காற்றில் கார் மீது விழுந்த மரம் உயிர் தப்பிய டிரைவர்
வீசிய காற்றில் கார் மீது விழுந்த மரம் உயிர் தப்பிய டிரைவர்
ADDED : ஆக 27, 2024 04:22 AM

குன்னுார்: குன்னுாரில் பலத்த காற்று வீசியதில், கற்பூர மரம் காரின் மீது விழுந்ததில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நீலகிரி மாவட்டம், குன்னுாரில் கடந்த, 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை வண்டிச்சோலை அருகே, கோத்தகிரி சாலையில் கற்பூர மரம் விழுந்தது. அப்போது அவ்வழியாக பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்ற காரின் மீது திடீரென மரத்தின் கிளைகள் விழுந்ததால், கார் கண்ணாடிகள் உடைந்தன.
அதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.
மரம் விழுந்ததில், சாய்ந்த மின்கம்பங்களின் சீரமைப்பு பணியை மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக மேற்கொண்டனர். இதனால், குன்னுார்-- கோத்தகிரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சுற்றுப்புற பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.