ADDED : ஏப் 30, 2026 07:52 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே நெலாக்கோட்டை சாலையில் நாள்தோறும் வாக்கிங் வரும் காட்டு யானையால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பந்தலுார் அருகே, நெலாக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு, மேலாக ஆண் யானை ஒன்று முகாமிட்டுள்ளது.
பகல் நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு அருகே உள்ள, புதர் பகுதியில் படுத்து ஓய்வெடுக்கும் இந்த ஆண் யானை, இரவில் சாலையை கடந்து தோட்ட பகுதியில் மற்றும் வனங்களில் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது.
நாள்தோறும் காலை, 6:00 மணி முதல் 7:00 மணிக்குள், போலீஸ் நிலையத்தை ஒட்டிய வழியில் பஜாருக்குள் வரும் இந்த யானை, கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாலையில் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. எதிரில் வாகனங்கள் வந்தால், தாக்குவதையும் வழக்கமாக்கி உள்ளது. இதனால், மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, இந்த யானையால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படும் முன்னர், அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
