தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீரோடை பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை

நீரோடை பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை

நீரோடை பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை


ADDED : ஆக 31, 2024 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2024 02:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்;கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் அருகே, உடல் உள்உறுப்புகள் பாதிக்கப்பட்டு காட்டு யானை உயிரிழந்தது.

கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தொட்ட கழகமான டான்டீ, தேயிலை தோட்டம் அருகே, நீரோடை பகுதியில் காட்டு யானை இறந்து கிடப்பதை, தொழிலாளர்கள் பார்த்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வனச்சரகர்கள் சஞ்சீவ், சுரேஷ்குமார், அய்யனார், மீரான் இலியாஸ் மற்றும் வன ஊழியர்கள் அதன் உடலை ஆய்வு செய்தனர். ஆய்வில் நீரோடையில் பெண் காட்டு யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது.

அதன் உடலை முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு, 25 வயது இருக்கும். ஏற்கனவே மற்றொரு யானையுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அதன் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. ஆய்வக பரிசோதனைக்காக உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us