/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆக்ரோசமாக வந்த காட்டு யானை: ஓட்டம் பிடித்த மக்கள்
/
ஆக்ரோசமாக வந்த காட்டு யானை: ஓட்டம் பிடித்த மக்கள்
ADDED : செப் 03, 2024 02:16 AM

கூடலுார்;கூடலுார் கோழிப்பாலம் மயானம் பகுதியிலிருந்து, நேற்று மதியம், 3:30 மணிக்கு காட்டு யானை ஒன்று, திடீரென கோழிக்கோடு சாலைக்குள் வந்தது.
அப்போது, கூடலுாரில் இருந்து நாடுகாணி நோக்கி வந்த தனியார் பள்ளி பஸ், ஓட்டுனர் அதிர்ச்சியடைந்து பஸ்சை நிறுத்தினார். ஆக்ரோசமாக காணப்பட்ட யானை, கோழிப்பாலம் நோக்கி சென்றது.
யானையை கண்ட அப்பகுதி மக்களும், பஸ்சுக்கு காத்திருந்த பயணிகளும் அலறி அடித்து ஓடி உயிர் தப்பினர். தொடர்ந்து, அப்பகுதியினர் யானையை விரட்டினர். யானை தனியார் எஸ்டேட் செல்லும் சாலை வழியாக சென்று, வனத்துக்குள் சென்றது. அப்போது சாலையோரம் நிறுத்தி இருந்த, இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி சென்றது.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மக்கள் கூறுகையில், 'மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.