/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் மஞ்சள் நிற ஒட்டு பசை பொறி
/
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் மஞ்சள் நிற ஒட்டு பசை பொறி
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் மஞ்சள் நிற ஒட்டு பசை பொறி
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் மஞ்சள் நிற ஒட்டு பசை பொறி
ADDED : மே 01, 2024 11:16 PM

சூலுார் : தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டு பசை பொறி அமைக்க வேண்டும், என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படட்து.
வேளாண் பல்கலையில், நான்காம் ஆண்டு இளங்கலை பயிலும் வேளாண் மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் விவசாயிகளுக்கு களப்பயிற்சி அளித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். வெள்ளை ஈக்கள் லார்வா நிலையில் தேங்காய் துருவல்களின் சாற்றை உண்ணும். வளர்ந்த பூச்சிகள் இலைகளுக்கு அடியில் வெள்ளை நிற வடிவங்களை உருவாக்குகின்றன.
பூஞ்சை உருவாக்கம் காரணமாக அவை கருப்பு நிறமாக மாறும். இதனால், தென்னையில் உற்பத்தி குறையும். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, மஞ்சள் நிற ஒட்டு பசை பொறி பெரிதும் உதவுகிறது. பறக்கும் திறன் கொண்ட வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற ஒட்டு பொறியால் ஈர்க்கப்பட்டு, அதில் ஒட்டி இறந்து விடும். இம்முறையை விவசாயிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும், என, விவசாயிகளிடம் மாணவர்கள் வலியுறுத்தினர்.

