/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகராயம்பாளையத்தில் ஆதார் திருத்த முகாம்
/
வாகராயம்பாளையத்தில் ஆதார் திருத்த முகாம்
ADDED : மே 01, 2024 11:18 PM

கருமத்தம்பட்டி : வாகராயம்பாளையத்தில் நடந்த ஆதார் திருத்த முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.
மோப்பிரிபாளையம் பேரூராட்சி உயிர் சமூக சேவை மையம் மற்றும் கருமத்தம்பட்டி அஞ்சல் நிலையம் சார்பில் ஆதார் திருத்த முகாம் வாகராயம் பாளையத்தில் நடந்தது.
பேரூராட்சி தலைவர் சசிக்குமார் முகாமை துவக்கி வைத்தார். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் ஆதார் கார்டில் திருத்தம் செய்தல், மொபைல் எண் இணைத்தல் உள்ளிட்ட மாற்றங்கள் செய்து பயன் பெற்றனர்.
புதிய அட்டை எடுத்தல், குழந்தைகளுக்கான ஆதார் அட்டை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. அஞ்சல் நிலைய அலுவலர்கள், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

