/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அன்னுார் அருகே ஆதார் சிறப்பு முகாம்
/
அன்னுார் அருகே ஆதார் சிறப்பு முகாம்
ADDED : மே 29, 2024 11:17 PM
அன்னுார் : அன்னுார் அருகே நடந்த, ஆதார் சிறப்பு முகாமில், 245 நபர்களுக்கு ஆதார் திருத்தம் செய்யப்பட்டது.
அன்னுார் அருகே குன்னத்தூராம்பாளையத்தில், இந்திய அஞ்சல் துறை, அன்னுார் துணை அஞ்சலகம், நாகமாபுதூர் கிளை அஞ்சலகம், அன்னுார் பேரூராட்சி மற்றும் குன்னத்தூராம்பாளையம் எஸ்.எஸ்.ரைஸ் மில் ஆகியோர் இணைந்து, ஆதார் சிறப்பு முகாமை நடத்தினர்.
இதில் ஆதார் புதிதாக எடுத்தல், பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், மொபைல் நம்பர் இணைத்தல், முகவரி திருத்தம் உள்பட பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. மூன்று நாட்கள் நடந்த இந்த சிறப்பு முகாமில், 245 நபர்களுக்கு ஆதார் அட்டை திருத்தம் செய்யப்பட்டது.
இப்பணியில் அன்னுார் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், குன்னத்தூராம்பாளையம் கவுன்சிலர் ராசாத்தி, அன்னுார் எஸ்.எஸ்.ரைஸ் மில் சிவக்குமார் மற்றும் துணை மற்றும் கிளை அஞ்சல் துறை அலுவலர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.
அன்னுார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்தனர்.