/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பஸ்சில் 'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில்கள் தாராளம் ;சோதனை பணிகளில் தொய்வு

ADDED : மே 28, 2024 12:23 AM

குன்னுார்:நீலகிரியில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில்கள் சுற்றுலா பஸ்களில் அதிகளவில் எடுத்து வரப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில, 21 வகையான, 'பிளாஸ்டிக்' தடை விதிக்கப்பட்ட நிலையில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது.
இதனை கண்காணிக்க கல்லார் சோதனை சாவடியிலும், வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டு சோதனை மையத்திலும், சோதனை செய்து, பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
எனினும், பல சுற்றுலா வாகனங்களில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த தனியார் பஸ்சின் மேற்பகுதியில், 500க்கும் மேற்பட்ட பாட்டில்கள் கொண்டுவரப்பட்டன. இந்த 'வீடியோ' சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'சோதனை சாவடி மையங்களில் வாகனங்களில் சோதனை செய்யும் சில பஞ்., ஊழியர்கள் பயணிகளுக்கு அபராதம் விதித்தாலும், ரசீது வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் பஸ்சின் மேல் அடுக்கி வைக்கப்பட்டும் அதனை சோதனை செய்யாததால், ஊட்டியில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்,' என்றனர்.