/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் இரு வேறு இடங்களில் விபத்து: 15 பேர் காயம்
/
கூடலுாரில் இரு வேறு இடங்களில் விபத்து: 15 பேர் காயம்
கூடலுாரில் இரு வேறு இடங்களில் விபத்து: 15 பேர் காயம்
கூடலுாரில் இரு வேறு இடங்களில் விபத்து: 15 பேர் காயம்
ADDED : மார் 09, 2025 10:52 PM

கூடலுார்; கூடலுாரில் இரு வேறு இடங்களில் நடந்த வாகன விபத்துகளில், 15 பேர் காயமடைந்தனர்.
கேரளா மாநிலம், கண்ணுாரை சேர்ந்த, 16 சுற்றுலா பயணிகள், மினி பஸ்சில் நேற்று காலை, ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். பஸ் காலை, 11:15 தேவர்சோலையை கடந்து, கூடலுார் நோக்கி வந்து கொண்டிருந்த போது பாடந்துறை அருகே கட்டுப்பாட்டை இழந்து, தனியார் தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகளை அப்பகுதி மக்கள் மீட்டனர். லேசான காயமடைந்த ஓட்டுனர் மற்றும் பயணிகள், 10 பேர் சிகிச்சைகாக, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவர்சோலை போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காஞ்சிகோவில் என்ற இடத்தில் இருந்து, கூடலுார் பகுதியில் நடந்த திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு, பஸ்சில், 47 பேர் வந்துள்ளனர். பஸ் ஊசிமலை காட்சி முனை அருகே வந்தபோது கடடுப்பாட்டை இழந்து, 100 அடி பள்ளத்தில் இறங்கியது. அதில், காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்த சுஜிதா,27, சுகுணா,25, ஜெசி சந்திரிகா,63, உள்ளிட்ட ஐந்து பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை போலீசார், தீயணைப்பு படையினர் மீட்டு, கூடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நடுவட்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.