/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மதுவானா சந்திப்பில் வாகன நெரிசல்: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
/
மதுவானா சந்திப்பில் வாகன நெரிசல்: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
மதுவானா சந்திப்பில் வாகன நெரிசல்: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
மதுவானா சந்திப்பில் வாகன நெரிசல்: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : மே 17, 2024 12:21 AM

ஊட்டி;'ஊட்டி மதுவானா சந்திப்பில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில், கடந்த, 10ம் தேதி, 126வது மலர் கண்காட்சி துவங்கி, 20 தேதி வரை நடந்து வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தாவரவியல் பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள், மதுவானா சந்திப்பு வழியாக, திருப்பிவிடப்படுகிறது. ஒரே நேரத்தில், அதிக வாகனங்கள் செல்வதால், வாகன நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது.
இதனால், கோத்தகிரி-ஊட்டி மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் உட்பட, தனியார் உள்ளூர் வாகனங்கள் நெரிசலில் சிக்குவதால், கால தாமதம் ஏற்படுகிறது.
இதனால் உள்ளூர் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குறிப்பிட இடத்தில் கூடுதல் போலீசாரை பணியமர்த்தி, வாகன நெரிசலை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.