/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராம்சந்த் சாலையில் குழி சீரமைக்க நடவடிக்கை தேவை
/
ராம்சந்த் சாலையில் குழி சீரமைக்க நடவடிக்கை தேவை
ADDED : செப் 06, 2024 02:57 AM

கோத்தகிரி:கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட, ராம்சந்த் சாலையில், குழிகள் ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட ராம்சந்த் பகுதியில், அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்துள்ளன.
மக்கள் நெரிசல் மிகுந்த இச்சாலையில், பழைய நுாலகம், புதிய நுாலகம் இடையே, சாலையில் குழிகள் ஏற்பட்டுள்ளன. குழிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஒரு பகுதியில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், குறுகலான சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர, பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள், அதிகளவில் பயன்படுத்துவதால், மக்கள் நடந்து செல்வதற்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, 'பேட்ச் ஒர்க்' பணியை மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.