/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அனுமதியில்லாத மனநல காப்பகங்கள் மீது நடவடிக்கை
/
அனுமதியில்லாத மனநல காப்பகங்கள் மீது நடவடிக்கை
ADDED : ஜூன் 26, 2024 10:31 PM
கோவை : கோவையில்மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையங்கள், சிறப்பு பள்ளிகள், மனநலகாப்பகங்கள் பதிவுச்சான்று அல்லது அங்கீகாரம் பெறாமல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக கல்வி அளித்தல், இயன்முறை தொழிற்பயிற்சி அளித்தல் மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை அரசு சாரா நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 ன் படி பதிவுச்சான்று மற்றும் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது. இதுவரை மேற்கண்ட சட்டத்தின்படி பதிவுச்சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் அரசு சாரா நிறுவனங்கள் ஒருமாத காலத்திற்குள் அங்கீகாரம் பெறவில்லை என்றால் மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்கள் அடங்கிய கருத்துருவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சமர்பித்து அரசு அங்கீகாரம் மற்றும் பதிவுச்சான்று பெற்றிட வேண்டும். அப்படி பதிவுச்சான்று பெறாமல் இயங்கும் அரசு சாரா நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.