தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பதற்றமான ஓட்டு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

பதற்றமான ஓட்டு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

பதற்றமான ஓட்டு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு


UPDATED : மார் 22, 2024 12:47 PM

ADDED : மார் 22, 2024 12:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2024 12:47 PM ADDED : மார் 22, 2024 12:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்;சூலுார் சட்டசபை தொகுதியில், ஏழு இடங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சூலுார் சட்டசபை தொகுதியில்,332 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதில், ஏழு இடங்களில் அமைய உள்ள, 25 ஓட்டு சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சூலுார் மற்றும் கண்ணம்பாளையத்தில் உள்ள அந்த, 25 ஓட்டு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், அந்த ஓட்டு சாவடிகளுக்கான வாக்காளர் பட்டியல் பெறப்பட்டு, ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாதையன் கூறுகையில், 'பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகளுக்கு தேர்தலன்று கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். மேலும், சூலுார் தொகுதிக்குட்பட்ட சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை பகுதியில், இதுவரை, 23 துப்பாக்கிகள் பெறப்பட்டு, ஆயுதப்படை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us