/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமத்தில் ஆடல் பாடலுடன் மாணவர் சேர்க்கை
/
கிராமத்தில் ஆடல் பாடலுடன் மாணவர் சேர்க்கை
ADDED : மார் 28, 2024 11:47 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே பழங்குடி கிராமத்தில் ஆடல் பாடலுடன் மாணவர்கள் சேர்க்கை நடந்தது.
பந்தலுார் அருகே கூவமூலா பகுதியில், அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி கூவமூலா பழங்குடியின கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உதவி ஆசிரியர் லதா வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஞானேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளா தலைமை வகித்து பேசுவையில், ''அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து கல்வி உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசு கூடுதலான சலுகைகளை வழங்கி வரும் நிலையில், மாணவர்களை தினசரி அழைத்துச் செல்ல வழி துணையாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பெற்றோர் வேலைக்கு சென்று விட்டாலும், இவர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மாணவர்ளை தயார்படுத்தி பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளை தினசரி பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் எதிர்காலத்தை வளம் உள்ளதாக மாற்ற வேண்டும்,'' என்றார்.
முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மனாப் பழங்குடியின பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நடனங்களை நடத்தினர். வீடுகளில் சென்று ஆலோசனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதில், பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். நிகழ்ச்சியில், இல்லம் தேடி தன்னார்வலர் வாசுகி, ஷாலினி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

