ADDED : ஆக 10, 2026 07:03 PM
ஊட்டி: ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில், 2026–27ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை அறிவியல் மற்றும் இளம் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள மாணவர் சேர்க்கை இறுதி நாள் வரும், 14ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலை முதலாம் ஆண்டு துணை நிலை தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், ஏற்கனவே விண்ணப்பித்த, விண்ணப்பிக்காத மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள், சேர்க்கை கட்டணம் செலுத்திய ரசீதுடன், விண்ணப்பம், ஆன்லைனில் பெறப்பட்ட மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், 10, பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி புத்தக முதல் பக்கம் நகல் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட வற்றை துறை தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
‘கட் -ஆப்’ மதிப்பெண் என்பது, மொழி பாடங்களை தவிர, ஏனைய பாடங்களின் கூட்டு தொகையானது, 400க்கு கிடைக்கும் மதிப்பெண் ஆகும். மாநில பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு, 3,700 மற்றும் இதர பாட திட்டத்தில் பயின்ற மானவர்களுக்கு, 4,300 ரூபாய் சேர்க்கை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த தகவலை, அரசு கலை கல்லுாரி முதல்வர் எபினேசர் தெரிவித்துள்ளார்.
