/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்துக்கு அ.தி.மு.க., நிதி உதவி

ADDED : ஆக 13, 2024 01:53 AM

கூடலுார்;வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கூடலுாரை சேர்ந்த, 3 பேரின் குடும்பங்களுக்கு, அ.தி.மு.க., சார்பில் தலா, 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.
கேரளா வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அங்கு தங்கி பணியாற்றி வந்த கூடலுார் மரப்பாலம் அட்டிகொல்லி பகுதி சேர்ந்த காளிதாஸ்; பந்தலுார் அய்யன்கொல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்த கல்யாணகுமார்; கையுன்னி பகுதியை சேர்ந்த சியாபுதீன் ஆகியோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்தாரை, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத், கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அ.தி.மு.க., சார்பில் தலா, 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினர். உடன் நெல்லியாளம் நகர செயலாளர் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.