/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்கள் பிரச்னைகளை தீர்ப்பேன் அ.தி.மு.க., வேட்பாளர் தகவல்
/
மக்கள் பிரச்னைகளை தீர்ப்பேன் அ.தி.மு.க., வேட்பாளர் தகவல்
மக்கள் பிரச்னைகளை தீர்ப்பேன் அ.தி.மு.க., வேட்பாளர் தகவல்
மக்கள் பிரச்னைகளை தீர்ப்பேன் அ.தி.மு.க., வேட்பாளர் தகவல்
ADDED : ஏப் 18, 2024 04:51 AM

ஊட்டி, : நீலகிரி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வன் நேற்று ஊட்டி பஸ் ஸ்டாண்ட், ஏ.டி.சி., பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு, ஊட்டி மார்க்கெட்டில் ஓட்டு சேகரிப்பிற்கு பின், மலை மாவட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அப்போது, லோகேஷ் தமிழ் செல்வன் பேசுகையில்,''ஊட்டிக்கு பிலிம் சிட்டி கொண்டு வருவேன். தொழிற்சாலைகளை கொண்டு வந்து உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புக்கு உறுதி செய்வேன். தேயிலை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து, பார்லியில் குரல் கொடுப்பேன். ஊட்டியில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ள போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்.குறிப்பாக, மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலைக்கு அ.தி.மு.க., ஆட்சியில் முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதனை நிறைவு செய்வேன். ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் பிரச்னைகளை தீர்க்க முயற்சி எடுப்பேன். என்னை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என்றார்.

