/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் :தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை
/
அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் :தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை
அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் :தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை
அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் :தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை
ADDED : மார் 26, 2024 10:15 PM
சூலுார்:தேர்தலில் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், என, பயிற்சி முகாமில் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வரும் லோக்சபா தேர்தலில் பணியாற்றும் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், சூலுார் ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் நடந்தது. ஓட்டு சாவடி அலுவலர்கள், நிலை அலுவலர்கள், நிலை, 1,2,3 மற்றும் 4 உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும், ஆயிரத்து, 600க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். முகாமில் பயிற்சியாளர்கள் பேசியதாவது:
தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு, விதிமுறைகளை பின்பற்றி பணியாற்ற வேண்டும். ஒரு தலைபட்சமாக நடக்கக்கூடாது.
எந்த ஒரு சந்தேகம் என்றாலும் உங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் பேசினர்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசி, தாசில்தார் தனசேகர், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சேகர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
ஓட்டு சாவடி முதன்மை அலுவலரின் பணிகள், வாக்காளர் பெயர் அடையாளம் சரிபார்ப்பு பணி, கையொப்பம் பெற்று பதிவு செய்யும் பணி, அழியாத மை வைத்தல் உள்ளிட்ட பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

