/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள அறிவுரை
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள அறிவுரை
பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள அறிவுரை
பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள அறிவுரை
ADDED : மார் 21, 2024 10:50 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே, முக்கட்டி சோலாடி, அங்கன்வாடி மையத்தில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அங்கன்வாடி பணியாளர் சுனிதா வரவேற்றார். அதில் வக்கீல் கணேசன் பங்கேற்று பேசுகையில், ''பெண்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.
அதில், குழந்தைகள் பாதிக்கப்படுவது வேதனையை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க பெண் குழந்தைகளை பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சிறந்த முறையில் வழிநடத்த வேண்டும். ஆண்கள் மூலம் எந்தெந்த வகையில் பெண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்த்த வேண்டும்.
அதிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள என்ன செய்வது என்பதையும் தினசரி அறிவுறுத்த வேண்டியதும் அவசியம் ஆகும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் விக்னேஸ்வரன், ஆசிரியர் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட பாலின வல்லுனர் இளையராஜா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுவரன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

