/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காமராஜரை போன்று நேர்மையாக வாழ அறிவுரை
/
காமராஜரை போன்று நேர்மையாக வாழ அறிவுரை
ADDED : ஜூலை 17, 2024 01:01 AM

குன்னுார்:'லஞ்சம் ஊழல் இல்லாமல். காமராஜரை போன்று, எளிமையாகவும் நேர்மையாகவும் பிள்ளைகள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்,' என, பள்ளி மாணவ, மாணவியருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
குன்னுார் அருகே கோடேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் செலின் வரவேற்றார். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மனோகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''தமிழக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த காமராஜர் கல்வி மட்டுமே மக்களுக்கு முன்னேற்றம் என்பதை உணர்ந்து கிராமங்கள் தோறும் பள்ளிகளை திறந்தார். மதிய உணவு அளித்து குழந்தைகளை பள்ளிகளுக்கு வரவழைத்தார்.
மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு விவசாயம், தொழில் என இரண்டையும் புரிந்து கொண்டு அணைகள் மற்றும் தொழிற்சாலைகளை உருவாக்க காரணமாக இருந்தார். தற்போதைய ஆடம்பர உலகில் லஞ்சம் ஊழல் போன்றவை அதிகரித்து, எளிமை நேர்மை ஆகியவை காணாமல் போய்விட்டன. எனவே லஞ்சம் ஊழல் இல்லாமல். காமராஜரை போன்று, எளிமையாகவும் நேர்மையாகவும் பிள்ளைகள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்.