ADDED : ஜூலை 27, 2026 02:10 PM
குன்னுார்: குன்னுார்– உபதலை ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு மேற்கொண்டார்.
உபதலை ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 9.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமையற்கூடம், அம்பிகாபுரத்தில் கால்வாய் துார்வாரும் பணி, உபதலை ஊராட்சி அலுவலகம், ரேஷன் கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அங்கன்வாடி மையம், அரசு தொடக்க பள்ளி, குன்னுார் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நீதி மாணவ-,மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ரேஷன் கடைகளில் பொருட்களின் தரம், இருப்பு மற்றும் பயிர்கடன் வழங்கல், குழந்தைகளின் கற்றல் திறன்; எடை, உணவு பொருட்களின் இருப்பு, உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மைதானத்தில் நடந்த மாணவிகளின் ஹாக்கி பயிற்சியை பார்வையிட்டார். வளங்கள் மீட்பு மையத்தை பார்வையிட்டு, மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை தனித்தனியாக பெற்று முறையாக செயலாற்ற, துாய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமசாமி உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
