/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'நான் முதல்வன் கல்லுாரி கனவு 2024' வழிகாட்டி நிகழ்ச்சியில் அறிவுரை
/
'நான் முதல்வன் கல்லுாரி கனவு 2024' வழிகாட்டி நிகழ்ச்சியில் அறிவுரை
'நான் முதல்வன் கல்லுாரி கனவு 2024' வழிகாட்டி நிகழ்ச்சியில் அறிவுரை
'நான் முதல்வன் கல்லுாரி கனவு 2024' வழிகாட்டி நிகழ்ச்சியில் அறிவுரை
ADDED : மே 10, 2024 11:27 PM

ஊட்டி;ஊட்டியில், 'நான் முதல்வன் கல்லுாரி கனவு-2024' வழிகாட்டி நிகழ்ச்சி துவக்க விழா நடந்தது.
அதில், பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசியதாவது:
நீலகிரியில் பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, உயர் கல்விக்கான வாய்ப்புகள், பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், 'டிப்ளமோ' படிப்புகள், கல்லுாரிகளை தேர்ந்தெடுப்பது குறித்த ஆலோசனைகள் வழங்குவதற்காக, 'நான் முதல்வல் திட்டம்' துவக்கி வைக்கப்பட்டது.
மேலும், பல்வேறு படிப்புகள் குறித்து, சமீபத்திய தகவல்கள், தொழில் துறைகளுக்கு தேவையான திறன்கள், கல்லுாரி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து விவரங்களையும் வழங்குவதே, நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம்.
இது மாநிலத்தில் உள்ள மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கை லட்சியங்களை அடையும் வகையில், தங்களுக்கு விருப்பமான துறையில் பயிற்சி பெற உதவுகிறது.
தொழில் துறையில் தற்போதுள்ள பணியிட இடைவெளிகளை நிரப்பக்கூடிய, திறன் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கும் வகையில், பல்வேறு திறன் பயிற்சிகளை அவர்களுக்கு அளிப்பதற்கான ஆற்றல்மிகு பயிற்றுனர்களை அடையாளம் காண்பதும் இத்திட்டத்தின் குறிக்கோள்.
இந்த முதன்மை திட்டத்தின் மூலமாக, மாணவர்கள் பயிற்சி பெற முடியும். திறன்களுக்கு ஏற்ப, வேலைவாய்ப்பு பெறுவதற்கு இத்திட்டம் உதவுகிறது.
கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனைகளும் வழங்கப்படும். மாணவர்கள் இதனை பயன்படுத்தி பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
முன்னதாக, கல்லுாரிகள் அமைத்திருந்த கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களுக்கு கையேடுகளை கலெக்டர் வழங்கினர்.