/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சோளம் சாகுபடி தொழில் நுட்பங்கள் முன்னோடி விவசாயிகள் அறிவுரை
/
சோளம் சாகுபடி தொழில் நுட்பங்கள் முன்னோடி விவசாயிகள் அறிவுரை
சோளம் சாகுபடி தொழில் நுட்பங்கள் முன்னோடி விவசாயிகள் அறிவுரை
சோளம் சாகுபடி தொழில் நுட்பங்கள் முன்னோடி விவசாயிகள் அறிவுரை
ADDED : ஆக 13, 2024 01:21 AM
பெ.நா.பாளையம்;சோளம் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறியுள்ளனர்.
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையையொட்டி விதைப்பு செய்யலாம். சராசரி மழை அளவு, 250 முதல், 300 மி.மீ., உள்ள இடங்கள் மிகவும் ஏற்றது. கோடை மழையை பயன்படுத்தி, பயிர் அறுவடைக்கு பின்பு நிலத்தை சட்டி கலப்பை கொண்டு, ஆழமாக உழவு செய்ய வேண்டும்.
பின்னர், ஒவ்வொரு மழைக்கு பின்பும் கலப்பை கொண்டு, நிலத்தை உழுது விட வேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு, மழை நீர் சேமிக்கப்படுகிறது.
கோடை மழையினால் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டு புழுக்கள் உழவின் போது, மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுவதால், பயிர் காலத்தில் பூச்சி தாக்குதல் குறையும்.
மழைக்காலத்தில் மழை நீரை சேமித்து, மண் ஈரம் காக்க ஆழச்சால், அகலப்படுத்தி, சம உயர வரப்பு, சமதள சாகுபடி, நிலப் போர்வை அமைத்தல், களை கட்டுப்பாடு போன்ற முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மழை ஆரம்பிப்பதற்கு, 15 நாட்களுக்கு முன்பு விதைப்பது தான் முன் பருவ விதைப்பு. விதைகளை கடினப்படுத்தி, 5 செ.மீ., ஆழத்தில் விதைக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் மழை ஆரம்பத்தை பொறுத்து விதைக்கும் தருணம் வேறுபடலாம்,என்றனர்.