/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒரு மாதம் தொடர் சிகிச்சைக்கு பின் பரம்பிக்குளத்தில் சிறுத்தை விடுவிப்பு
/
ஒரு மாதம் தொடர் சிகிச்சைக்கு பின் பரம்பிக்குளத்தில் சிறுத்தை விடுவிப்பு
ஒரு மாதம் தொடர் சிகிச்சைக்கு பின் பரம்பிக்குளத்தில் சிறுத்தை விடுவிப்பு
ஒரு மாதம் தொடர் சிகிச்சைக்கு பின் பரம்பிக்குளத்தில் சிறுத்தை விடுவிப்பு
ADDED : ஜூலை 13, 2024 08:38 AM
பாலக்காடு : பாலக்காடு அருகே அட்டப்பாடியில், சோர்வடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை, சிகிச்சைக்கு பின் முழு ஆரோக்கியம் பெற்றதும் பரம்பிக்குளம் வனத்தில் விடப்பட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே வன எல்லை பகுதியான அட்டப்பாடி புளியப்பதியில், கடந்த ஜூன் 10ம் தேதி தனியாருக்கு சொந்தமான தோப்பில், ஏழு வயது மதிக்கத்தக்க சிறுத்தை கழுத்தில் காயங்களுடன் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டது.
வனத்துறையினர், சிறுத்தையை மீட்டு, முதலில் முக்காலியில் உள்ள வன அலுவலகத்தில் கூண்டுக்குள் வைத்து கால்நடை மருத்துவர் டேவிட் ஆபிரகாம் தலைமையில் சிகிச்சை அளித்தனர். சிறுத்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின், பாலக்காடு அருகே உள்ள தோணி வன அலுவலகத்துக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளிப்பட்டது. இந்நிலையில் முழு ஆரோக்கியம் பெற்ற சிறுத்தையை வனத்துறையினர் பரம்பிக்குளம் வனத்தில் நேற்று முன்தினம் விடுவித்தனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறுத்தைகள் இடையே ஏற்பட்ட மோதலால், கழுத்தில் காயம் ஏற்பட்டு தலை தூக்க கூட முடியாமல் சோர்வடைந்த நிலையில் இருந்தது.
ஒரு மாத காலம் சிறப்பு சிகிச்சை அளித்து வந்தோம். தொடர் சிகிச்சையால், சிறுத்தை முழு ஆரோக்கியம் பெற்றது. ஒவ்வொரு கட்டத்திலும் வனத் துறையின் உயர் அதிகாரிகள், சிறுத்தையின் உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.
முழு ஆரோக்கியம் பெற்ற சிறுத்தையை, சிறப்பு வாகனத்தில் தோணியில் இருந்து பரம்பிக்குளம் கொண்டு சென்று அடர்ந்த வனத்தில் விடுவிக்கப்பட்டது. சிறுத்தைக்கு சிகிச்சை அளித்து குணமடைந்த பின் வனப்பகுதியில் விடுவது, பாலக்காட்டில் இதுவே முதல்முறை ஆகும்.
இவ்வாறு, கூறினர்.