/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பில்லுார் அணையில் மின் உற்பத்தி மூன்று மாதத்திற்கு பிறகு துவக்கம் 3,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ADDED : மே 23, 2024 01:54 AM
மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு, நேற்று மின் உற்பத்தி துவங்கியது. இதனால் பவானி ஆற்றில், வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கோவை நீலகிரி மாவட்ட எல்லையில், பில்லூர் மலைப்பகுதியில், 100 அடி உயரத்தில், பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. பில்லூர் அணையில் இருந்து, கோவை மாநகராட்சி, 2 குடிநீர் திட்டங்களுக்கு, நேரடியாக தண்ணீர் எடுக்கப்படுகிறது.
மேலும் அணையில் இருந்து, மின் உற்பத்திக்காக திறந்து விடப்படும் தண்ணீர், பவானி ஆறு வழியாக, பவானிசாகர் அணைக்கு செல்கிறது. பவானி ஆற்றில் இருந்து, 21 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், அணைக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்தது. இதனால் அணையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இம்மாதம் முதல் வாரத்தில் அணையின் நீர்மட்டம், 54 அடியாக குறைந்தது. இதனால் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியது.
தற்போது அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து தற்போது, 94.50 அடியாக உயர்ந்துள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடி உள்ளதால், அணையிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, நேற்று மின் உற்பத்தி துவங்கியது.
அணையில் இருந்து வினாடிக்கு, 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த தண்ணீர் பவானி ஆறு வழியாக பவானிசாகர் அணைக்கு செல்கிறது. பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து, குடிநீர் திட்டங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்க உள்ளது. மேலும் விவசாயத்திற்கும் தேவையான தண்ணீர் கிடைக்க உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.