தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கூடலுாரில் எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்

கூடலுாரில் எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்

கூடலுாரில் எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 08, 2026 06:05 PM

ADDED : அக் 08, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 06:05 PM ADDED : அக் 08, 2026 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்:கூடலுாரில் எல்.ஐ.சி., அலுவலகம் எதிரே, அகில இந்திய எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்கத்தின் கிளை தலைவர் ஜெயகுமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'முகவர்களின் குறைக்கப்பட்ட கமிஷனை திரும்ப பெற் வேண்டும்; குழு காப்பீடு வயது வரம்பு இன்றி அனைத்து முகவர்களுக்கும் வழங்க வேண்டும்; கமிஷன் மீது ஜி.எஸ்.டி., விதிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்,' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், செயல் தலைவர் மோகனன், செயலாளர் முஸாபர், பொருளாளர் அபூபக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் புண்ணியகுமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us