விடுதி மேலாளரை தாக்கிய அ.தி.மு.க., நிர்வாகி தலைமறைவு
விடுதி மேலாளரை தாக்கிய அ.தி.மு.க., நிர்வாகி தலைமறைவு
ADDED : ஜூன் 19, 2026 10:01 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் உழவர் சந்தை அருகே தனியார் விடுதி இடத்தில் கட்டணம் பார்க்கிங் உள்ளது.
இங்கு கார் நிறுத்த வந்த ராஜேந்திரபிரசாத் என்பவரிடம், குன்னுார் நகர அ.தி.மு.க., மாணவரணி செயலாளர் அப்பாஸ், 45, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அங்கு வந்த இதனை தட்டி கேட்ட விடுதி மேலாளர் பாலசுப்ரமணி,55, என்பவரை தலையில் கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பலத்த காயமடைந்த பாலசுப்ரமணி குன்னுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில்,‘அப்பாஸ் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. அடிதடி, பணம் பறித்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. தலைமறைவான அப்பாஸை தேடி வருகிறோம்,’என்றனர்.
