/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சில நிமிடங்களில் முடிந்த நகராட்சி கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
/
சில நிமிடங்களில் முடிந்த நகராட்சி கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
சில நிமிடங்களில் முடிந்த நகராட்சி கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
சில நிமிடங்களில் முடிந்த நகராட்சி கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
ADDED : பிப் 28, 2025 10:29 PM

குன்னுார்,; குன்னுார் நகராட்சியில் நேற்று நடந்த நகர மன்ற மாதாந்திர கூட்டம் சில நிமிடங்களில் முடிக்கப்பட்டதை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
குன்னுார் நகராட்சியில் நேற்று காலை, 11:30 மணிக்கு மாதாந்திர கூட்டம், தலைவர் சுசீலா தலைமையில், கமிஷனர் இளம்பரிதி, துணை தலைவர் வாசிம் ராஜா முன்னிலையில், துவங்கியது. தமிழ் தாய் வாழ்த்து பாடியதும், 'ஆல்பாஸ்' என கூறி, சில நிமிடத்தில் நகராட்சி கூட்டத்தை முடித்து வைக்கப்பட்டது.
இதன் பிறகு அங்கு வந்த, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கடந்த முறை, 12 மணிக்கு கூட்டம் நடத்தியதால் தாமதமாக வந்ததாக தெரிவித்தனர். அப்போது, 'முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவுக்காக கூட்டம் முடிக்கப்பட்டது,' என, தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சரவணகுமார், குருமூர்த்தி, ராஜ்குமார், உமாராணி, லாவண்யா ஆகியோர் நகர மன்ற நுழைவாயில் முன்அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சரவணகுமார் கூறுகையில், ''சொத்து வரி உயர்வுக்கு மறுபரிசீலனை செய்வது குறித்து இந்த கூட்டத்தில் தெரிவிப்பதாக கூறி, அதற்கு தீர்வு காணாமல் மக்கள் விரோத போக்கில் இந்த அரசு ஈடுபடுகிறது. மார்க்கெட் கடைகள் இடிப்பு பிரச்னைக்கு தீர்வு காணவில்லை.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவிற்காக கூட்டத்தை முடித்து விட்ட தாக தெரிவித்த தலைவர் சுசீலா, துணை தலைவர் வாசிம் ராஜா ஆகியோர் கமிஷனர், பொறியாளருடன், மக்கள் விரோத திராவிட மாடல் ஆட்சி நடத்துகின்றனர்,''என்றார்.
குருமூர்த்தி கூறுகையில், '' மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் திட்ட நிதியில் கமிஷன் பெற மட்டுமே குறிக்கோளாக உள்ளனர். வியாபாரிகளின் நலனை பற்றி சிந்திக்கவில்லை,'' என்றார்.
ராஜ்குமார் கூறுகையில், ''மார்க்கெட் கடைகள் கட்டுவதை தள்ளி வைக்க வியாபாரிகள் கேட்டு கொண்டதால், ஒத்திவைக்கும் தீர்மானம் மன்ற கூட்டத்தில் கொண்டு வருவதை தவிர்க்க, நாங்கள் வருவதற்குள் கூட்டம் முடிக்கப்பட்டது,'' என்றார்.