/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் அ.தி.மு.க., பொது கூட்டம்
/
ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் அ.தி.மு.க., பொது கூட்டம்
ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் அ.தி.மு.க., பொது கூட்டம்
ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் அ.தி.மு.க., பொது கூட்டம்
ADDED : பிப் 25, 2025 10:08 PM

ஊட்டி; ஊட்டி ஏ.டி.சி., யில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி பொது கூட்டம் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் வேலுசாமி பங்கேற்று கட்சியினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
அ.தி.மு.க., அரசு நீலகிரி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. திராவிடம் பேசும் முதல்வர், துணை முதல்வர் முதலில் தமிழ் கலாசாரப்படி வேஷ்டி அணிந்து வர வேண்டும். தமிழகத்தை ஆள்பவர்கள், தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டை முதலில் அறிய வேண்டும். தேர்தலில், 525 வாக்குறுதிகளை கொடுத்தனர்.
நான்காண்டு ஆட்சி காலமும் முடிந்துவிட்டது. பெரும்பாலான வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. விலைவாசி உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சியை விரட்ட மக்கள் தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட செயலாளர் வினோத், கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பால நந்தகுமார், முன்னாள் எம்.பி., அர்ஜூணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

