/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி
/
அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி
அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி
அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி
ADDED : ஜூன் 26, 2024 09:59 PM

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஆங்கில வழிக் கல்வியில், முதல் மூன்று இடத்தை பெற்றவர்களுக்கு இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை பாலாமணி நினைவாக ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல் இடத்தை பிடித்த மாணவி மகதிக்கு, முன்னாள் உடற்பயிற்சி இயக்குனர் ராஜன், 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கினார். இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்கள் வந்தினி, சந்தோஷ் சிவா ஆகியோருக்கு ஜெகதீஷ் சந்திரன் இரண்டு ஆயிரம், ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
கோவை மாவட்டம் கைப்பந்து கழக தலைவர் பாலசுந்தரம், தமிழ் வழி கல்வியில் முதலிடம் பெற்ற மாணவி பாக்யலட்சுமிக்கு, 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பெற்ற மாணவி, லோகேஸ்வரி, 7 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பெற்ற மாணவர் முத்துராமலிங்கம், 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாழ்த்தினார்.
விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.