/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மார்க்கெட் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு அ.தி.மு.க., பொது கூட்டத்தில் குற்றச்சாட்டு

ADDED : பிப் 27, 2025 03:24 AM
குன்னுார்: குன்னுார் வி.பி., தெருவில் அ.தி.மு.க., பொது கூட்டம், மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில், நடந்தது.
மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சத்தார் பேசுகையில், ''குன்னுாருக்கு, தேர்தல் பிரசாரத்தின் போது வந்த ஸ்டாலின் மார்க்கெட் பிரச்னையை முடித்து தருவதாக கூறிவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க செய்துவிட்டார்.
துணை தலைவர் உட்பட, 24 தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ள நிலையில், ஆளில்லாத இடத்திற்கு ரோடு போடுகின்றனர். தலைவர், துணை தலைவர், மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் இருந்தும், மார்க்கெட் பிரச்னையை முடித்து தரவில்லை.  இந்த பகுதியில் வெள்ளம் வந்த போது, ஏற்படுத்திய திட்டத்தால் மார்க்கெட்டுக்கு ஆபத்து வரவில்லை. சாலை, கட்டடம் உள்ளிட்டவை மட்டுமில்லாமல். குப்பையில் கூட கமிஷன் பார்க்கும் அவலத்தில் நகராட்சியில் தி.மு.க.,வினர்  உள்ளனர்,'' என்றார்.
ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, இளைஞரணி மாநில இணை செயலாளர் பாலநந்தகுமார், அவை தலைவர் மணி, குன்னுார் ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.