/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேரிங்கிராஸ் பகுதியில் ஆம்புலன்ஸ் செல்ல வழி தேவை
/
சேரிங்கிராஸ் பகுதியில் ஆம்புலன்ஸ் செல்ல வழி தேவை
ADDED : மே 01, 2024 12:41 AM

ஊட்டி;'ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்ல வழி விட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோத்தகிரி மற்றும் குன்னுார் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சேரிங்கிராஸ் பகுதியை கடந்து செல்வது வழக்கம். தற்போது சீசன் துவங்கியுள்ள நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன.
நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார், 'பேரிகார்டு' வைத்து, போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, சேரிங்கிராஸ் ஆதாம் நீரூற்று அருகே, காந்தி சிலையை ஒட்டி, ஆம்புலன்ஸ்கள் சென்று வந்த நிலையில், தற்போது அப்பகுதியில் இரண்டு இடங்களில் 'பேரிகார்டு' வைக்கப்பட்டுஉள்ளது.
இதனால், அவசர தேவைக்காக நோயாளிகளுன் ஆம்புலன்ஸ் செல்லும் போது, மற்ற வாகனங்களை போல, நெரிசலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'அவசர காலங்களில் நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் வரும்போது, காந்திசிலை அருகே வைக்கப்பட்ட பேரிகார்டை திறந்துவிட வேண்டும். நேற்று காலை, 108 ஆம்புலன்ஸ் செல்லும் போது இப்பகுதியில் வாகன நெரிசலில் சிக்கியது,' என்றனர்.