/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 24, 2024 01:08 AM

குன்னுார்;குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி வரலாற்று துறை, மகளிர் படிப்பு மையம், 'சிட்சா' அமைப்பு, குடும்ப நல சங்கம், லாலி மருத்துவமனை சார்பில், வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோத்தகிரி செயின்ட் மேரிஸ் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
நீலகிரி மாவட்ட மன நல திட்ட உளவியலாளர் அல்லி ராணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வளர் இளம் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு திட்டம் குறித்து சிட்சா குடும்ப நல நிர்வாகி அனிதா பேசினார். குடும்ப நல சங்கத்தை சேர்ந்த ராஜேஷ், மொபைல் போன்களின் பயன்பாடுகளால் இளம் தலைமுறையினரின் பாதிப்புகள் குறித்து பேசினார்.
ஏற்பாடுகளை, கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா, வரலாற்று துறை தலைவர் டாக்டர் ஷானி ரஸ்கின், பேராசிரியர்கள் சுதா, சவுமியா ராஜ் ஆகியோர் செய்தனர்.

