/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை துாள் விற்பனை நிலையம் கதவை சேதப்படுத்திய யானை
/
தேயிலை துாள் விற்பனை நிலையம் கதவை சேதப்படுத்திய யானை
தேயிலை துாள் விற்பனை நிலையம் கதவை சேதப்படுத்திய யானை
தேயிலை துாள் விற்பனை நிலையம் கதவை சேதப்படுத்திய யானை
ADDED : ஜூன் 29, 2024 01:59 AM

கூடலுார்;கூடலுார் பாண்டியார் டான்டீ, தேயிலை துாள் விற்பனை நிலையத்தின் இரும்பு கதவை காட்டு யானை சேதப்படுத்திய சம்பவத்தால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார், மரப்பாலம் அருகே, பாண்டியர் அரசு தேயிலை தோட்டம் (டான்டீ) பகுதியில் கோழிக்கோடு சாலையை ஒட்டி, டான்டீ தேயிலை துாள் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம், ஊழியர் டீத்துாள் விற்பனை முடித்துவிட்டு அதனை பூட்டி சென்றார். இரவு அப்பகுதிக்கு வந்த காட்டு யானை நிலையத்தின் இரும்பு கதவை சேதப்படுத்தி உள்ளது. வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த வனக்காப்பாளர் கலைக்கோவில் சேதமடைந்த இரும்பு கதவை ஆய்வு செய்தார். இச்சம்பத்தால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.