/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமத்திற்குள் புகுந்த யானை விவசாய பயிர்கள் சேதம்
/
கிராமத்திற்குள் புகுந்த யானை விவசாய பயிர்கள் சேதம்
கிராமத்திற்குள் புகுந்த யானை விவசாய பயிர்கள் சேதம்
கிராமத்திற்குள் புகுந்த யானை விவசாய பயிர்கள் சேதம்
ADDED : ஜூலை 09, 2024 01:24 AM
பந்தலுார்:பந்தலுார் அருகே கிராமத்திற்குள் புகுந்த யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.
பந்தலுார் அருகே, நெல்லியாளம் வாழவயல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு யானைகள் வந்துள்ளது. தேயிலை தோட்டம் வழியாக வந்த யானைகள் கிராமத்திற்குள் புகுந்து, வீடுகள் முன்பாக முகாமிட்டன.
இதனால் வீட்டினுள் இருந்தவர்கள் அச்சத்தில் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். எனினும் யானைகள் அங்கிருந்து அகலாமல், விவசாய தோட்டத்திற்குள் புகுந்து வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை சேதப்படுத்தியது. விடியும் வரை யானைகள் கிராமத்தில் முகாமிட்டதால், காலை நேரத்தில் வெளியிடங்களுக்கு செல்பவர்கள் சிரமப்பட்டனர். தொடர்ந்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.