/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் தடுக்க பயன்படும் பூச்சி உண்ணும் தாவரம்
/
நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் தடுக்க பயன்படும் பூச்சி உண்ணும் தாவரம்
நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் தடுக்க பயன்படும் பூச்சி உண்ணும் தாவரம்
நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் தடுக்க பயன்படும் பூச்சி உண்ணும் தாவரம்
ADDED : ஆக 13, 2024 01:59 AM

கூடலுார்;கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில், நன்னீரில் நோய் பரப்பும் நுண்ணுயிர்களை தடுக்கும் பூச்சிகளை உண்ணும் தாவரம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கூடலுார் பகுதி பல அரிய தாவரங்களின் வாழ்விடமாக உள்ளது. குறிப்பாக, இங்கு பூச்சிகளை உண்டு வாழும், 'டொசோரா' பேரினத்தை சேர்ந்த மூன்று, சிற்றினங்கள் குறிப்பிட்ட சில இடங்களை வாழ்விடமாக கொண்டுள்ளன.
இதை தவிர, நீரில் உள்ள நுண்ணுயிர்களை உண்டு வாழக்கூடிய, 'யுட்ரிகுளோரியா ஸ்டெலாரீஸ்' என்ற பெயர் கொண்ட நீர்வாழ் தாவரம் இப்பகுதியில் அரிதாகவே காணப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், ஓவேலி பகுதியில் உள்ள நீரோடையில் இத்தாவரம் இருப்பதை தாவர ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனை சேகரித்து நாடுகாணி சூழல் சுற்றுலா தாவர மையத்தில் உள்ள நீர் தொட்டிகளில் பாதுகாத்து வளர்க்கின்றனர்.
இவைகளின் இலைகளுக்கிடையே உள்ள, 'பிளாடர் வோட்' வாயிலாக நீரில் வாழும் சிறிய நுண்ணுயிர்களை உண்டு வாழ கூடிய இத்தாவரம், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
தாவர ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'அடர்ந்த வனப்பகுதியில், நீர்நிலைகளில் மிதவை தாவரமான இவைகள், அரிதாகவே காணப்படும்.
இந்த தாவரம் தண்ணீரில் உள்ள நோய் பரப்பும் நுண்ணுயிர்களை பிடித்து அதில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சு உணவாக்கி கொள்ளும். இதன்மூலம் தண்ணீர் சுத்தமாகும்.
இது போன்ற அறியவகை தாவரங்களை கண்டு பிடித்து, பாதுகாப்பது, தாவர ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.

