ADDED : மே 12, 2024 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே தட்டாம்பாறை, முருக்கம்பாடி, வட்டக்கொல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாள்தோறும் யானைகள் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
நேற்று மாலை, 6:00- மணிக்கு வட்டக்கொல்லி பகுதியில், நாகம்மாள், 65, வீட்டு வாசலில் நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை, நாகம்மாளை தாக்கிஉள்ளது.
அலறல் கேட்டு அருகில் இருந்தவர்கள் யானையை துரத்தி நாகம்மாளை பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன், வி.ஏ.ஓ., கர்ணன் உள்ளிட்டோர் விசாரிக்கின்றனர்.