/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துார்வாரப்படாத ஓடை தண்ணீர் சேமிப்பதில் சிக்கல்
/
துார்வாரப்படாத ஓடை தண்ணீர் சேமிப்பதில் சிக்கல்
ADDED : ஆக 17, 2024 12:52 AM

கோத்தகிரி;கோத்தகிரி குடிமனை ஓடை துார்வாரப்படாமல் உள்ளதால், மழை நாட்களில் தண்ணீர் சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட குடிமனை ஓடை, பல நுாறு ஏக்கர் பரப்பளவிலான தேயிலை மற்றும் காய்கறி விவசாய நிலங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. வறட்சி நாட்களிலும் வற்றாத இந்த ஓடையை நம்பியே, ஆண்டுதோறும் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, ஓடை துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், காட்டு செடிகள் ஆக்கிரமித்து, ஓடையின் ஆழமும் அகலமும் குறைந்து, ஓடை இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ளது. இதனால், மழை நாட்களில் தண்ணீர் சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ஓடையை நம்பி உள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மழை தீவிரமடைவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.