நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டி படகு இல்ல சாலையில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் அதிகளவில் சென்று வருகின்றனர்.
இங்கு இரவு நேரங்களில், சாலையோர விளக்குகள் எரியாமல் உள்ளதால், இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள், சாலையில் உள்ள குழிகளில் சிக்கி விழும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், தெரு விளக்குகளின் பழுதை நீக்கி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.