/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிக்கப்படாத டேவிஸ் பூங்கா சுற்றுலா பயணிகள் அதிருப்தி
/
பராமரிக்கப்படாத டேவிஸ் பூங்கா சுற்றுலா பயணிகள் அதிருப்தி
பராமரிக்கப்படாத டேவிஸ் பூங்கா சுற்றுலா பயணிகள் அதிருப்தி
பராமரிக்கப்படாத டேவிஸ் பூங்கா சுற்றுலா பயணிகள் அதிருப்தி
ADDED : மே 02, 2024 11:43 PM

ஊட்டி:ஊட்டி டேவிஸ் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன், திரும்பி செல்கின்றனர்.
ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே டேவிஸ் பூங்கா அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா பராமரிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக திறக்கப்பட்டது.
தற்போது, பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது. பூங்காவில் புல்தரை வளர்ந்து, மேய்ச்சல் நிலமாக மாறி உள்ளது. மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகள், அப்புறப்படுத்தாமல் குப்பைகள் போல் நிறைந்துள்ளன. பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுக்கு தண்ணீர் விடாமல், அப்படியே விடபட்டுள்ளது. பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையும் சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், சுற்றுலா பயணிகள் பூங்கா அழகை ரசிக்க முடியாத நிலையில், ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோடை சீசன் நடந்து வரும் நிலையில், டேவிஸ் பூங்காவை புனரமைத்து, பார்வையாளர்கள் பயன்பாட்டிற்கு திறந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.