/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிப்பு இல்லாத கோடப்பமந்து கால்வாய் மழைக்கால பாதிப்புகளை தடுக்க வேண்டும்
/
பராமரிப்பு இல்லாத கோடப்பமந்து கால்வாய் மழைக்கால பாதிப்புகளை தடுக்க வேண்டும்
பராமரிப்பு இல்லாத கோடப்பமந்து கால்வாய் மழைக்கால பாதிப்புகளை தடுக்க வேண்டும்
பராமரிப்பு இல்லாத கோடப்பமந்து கால்வாய் மழைக்கால பாதிப்புகளை தடுக்க வேண்டும்
ADDED : ஆக 23, 2024 02:35 AM

ஊட்டி;ஊட்டியில் தொடரும் மழையால், ஏரி கரை சுத்திகரிப்பு நிலையத்தில் தேங்கும் 'பிளாஸ்டிக்' கழிவுகளால் பாதிப்பு ஏற்படுகிறது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 28 வார்டுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், 3 கி.மீ., துாரம் உள்ள பிரதான கோடப்பமந்து கால்வாய் வழியாக ஏரியின் கரையில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்த பின், ஏரியில் கலக்கிறது.
இந்நிலையில், கோடப்பமந்து கால்வாயில் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு, கழிவுகள் கொட்டப்படுவதால் கழிவுநீர் வெளியேற போதிய வசதிகள் இல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மழை காலத்தில், சுத்திகரிப்பு நிலையம் முன்பாக தேங்கும் பிளாஸ்டிக் கழிவால் நீர் வெளியேறாமல் அங்கேயே தேங்கியுள்ளது.
இதனால், மழை சமயத்தில் நகரில் வெளியேறும் மழை நீர் ஏரிக்கு செல்ல முடியாமல், குடியிருப்புகளுக்கு புகுந்து விடுவது வாடிக்கையாகிவிட்டது.
சமீபத்தில், மத்திய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் சாக்கடை கலந்த மழைநீர் புகுந்தது. போக்குவரத்து கழக பணிமனை மற்றும் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில்,'பொதுப்பணித் துறை; நகராட்சி நிர்வாகம் இணைந்து கோடப்பமந்து கால்வாயில் கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையம் முன்பு தேங்கியுள்ள 'பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, ஏரியை முழுமையாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

