/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அண்ணா மார்க்கெட் கடைகளை இன்று காலி செய்ய உத்தரவு
/
அண்ணா மார்க்கெட் கடைகளை இன்று காலி செய்ய உத்தரவு
ADDED : மே 29, 2024 11:19 PM
மேட்டுப்பாளையம்: நகராட்சி அண்ணா மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தையும், இன்று உடனடியாக காலி செய்ய வேண்டும் என, நகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சி பங்களா மேடு பகுதியில், அண்ணாஜி ராவ் சாலையில், நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா தினசரி மார்க்கெட் உள்ளது. இக்கட்டடத்தினை இடித்து விட்டு, புதிதாக தினசரி மார்க்கெட் கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நகராட்சி நிர்வாகத்தால் தற்போது, தமிழக அரசு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணைப்படி, 4.40 கோடி ரூபாய் செலவில், புதிய கடைகள் கட்டப்பட உள்ளன. அதனால் தற்போதுள்ள கடை உரிமதாரர்கள், கடைகளை காலி செய்து, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, பலமுறை கூட்டங்கள் நடத்தி, அறிவிப்புகளும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று முன் தினம், (28ம் தேதி) நகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் அமுதா முன்னிலையில், கடை உரிமதாரர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, கடைகளை காலி செய்யாமல் இருப்பதால் தான், பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே காலம் தாழ்த்துவதை தவிர்த்து, இன்று (30ம் தேதி) காலை, 11 மணிக்குள் அண்ணா தினசரி மார்க்கெட் கடை உரிமதாரர்கள் கடைகளை காலி செய்து, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில், நாளை (31ம் தேதி) நகராட்சி நிர்வாகத்தால் கடைகளை காலி செய்து, உடனடியாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு கடை உரிமதாரர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு நகராட்சி கமிஷனர் அமுதா அறிக்கையில் கூறியுள்ளார்.