ADDED : மே 21, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில், தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், ராஜிவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கோத்தகிரி வட்டார தலைவர் சில்லபாபு தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் பில்லன், கட்சி நிர்வாகிகள் ராஜூ மற்றும் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டில் அமைதி நிலவவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள் பெள்ளி, கேசவ கிருஷ்ணன், முபாரக் உட்பட பலர் பங்கேற்றனர்.
