/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாரியத்தில் அரசின் திட்டங்களுக்கு எதிர்பார்ப்பு
/
வாரியத்தில் அரசின் திட்டங்களுக்கு எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 10, 2024 10:04 PM
குன்னுார் : 'வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், அரசின் சலுகைகள் வழங்கி திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அதில், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர்களாக உள்ளனர். இப்பகுதி மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளினால் வழங்கும் நல திட்ட உதவிகள், இதர அரசு சார்ந்த திட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார் கூறுகையில், ''ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடக்கும் கிராம சபை, நகர சபை கூட்டங்கள் வாரிய பகுதிகளில் நடப்பதில்லை. மத்திய மாநில அரசின் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம், விவசாய குறை தீர்ப்பு கூட்டங்கள் இங்கு நடப்பதில்லை. கிராமப்புற, 100 நாள் வேலை திட்டம் கன்டோன்மென்ட்டில் இல்லை.
''மத்திய, மாநில அரசு வழங்கும் பசுமை வீடு திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், மாநில அரசின் தொகுப்பு வீடு திட்டம், மத்திய அரசின் ஜல் ஜீவன் போன்ற திட்டங்களும் இங்கு இல்லை. கிராம அல்லது நகரில் எந்த பிரிவில் கன்டோன்மென்ட் வாரியம் உள்ளதோ, அந்த பிரிவில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும். இது தொடர்பாக, குன்னுாரில் நடந்த ஜமாபந்தி கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.