/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செடியில் நுனி கருகல்; விவசாயிகள் அறிவுரை
/
செடியில் நுனி கருகல்; விவசாயிகள் அறிவுரை
ADDED : ஜூன் 05, 2024 09:49 PM
பெ.நா.பாளையம் : செடியில் ஏற்படும் நுனி கருகலை எளிமையான முறையில் நீக்கலாம் என, முன்னோடி விவசாயிகள் கூறியுள்ளனர்.
செடியில் நுனி கருகல் ஏற்பட்டால், அதை நீர் பாசனம் வாயிலாக சரிப்படுத்தலாம். மண்ணை ஆழமாக ஈரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேல்மண்ணை ஈரம் காயாமல் வைத்துக் கொண்டால், பல நன்மைகளும் பலனும் கிட்டும். மேல் மண்ணை மட்டும் ஈரப்படுத்தும் போது காற்று மண்ணில் ஊடுருவி, வேருக்கும், நுண்ணுயிர்களுக்கும் பிராண வாவு கிடைக்க வழி செய்கிறது.
அவற்றின் சுவாசத்தினால் தாவரத்திற்கு ஒளிச்சேர்க்கைக்கு வேண்டிய கரியமில வாயு கிடைக்கும். மேலும், நீர் வழியாக சத்துக்கள் ஏற்றம் பெறுகிறது. ஒளி சேர்க்கைக்கு நீர் அவசியம்.
ஒளி சேர்க்கையின் வாயிலாக நுண்ணுயிர்களுக்கும் உணவு கிடைக்கும். பதிலுக்கு நுண்ணுயிர்கள் தாவரத்திற்கு வேண்டிய தாது சத்துக்களை தரும். ஒளி சேர்க்கையால் மாவு, புரத, கொழுப்பு சத்து உருவாகும். இப்படிப்பட்ட பாசனம் என்ற செயல்முறை தாவரத்திற்கு வேண்டிய அனைத்தையும் பெற வழி வகுக்கிறது.
கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, இலை வழியாக ஆவியாகும் நீர் அதிகமாகவும், ஏற்றம் பெறும் நீர், குறைவாக இருந்தாலும் நுனி கருகல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீர்ப்பாசனம் என்பது இந்த கோடை காலத்தில் மிகவும் அவசியமான ஒன்று என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.