/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழில் பயிற்சி நிலையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
தொழில் பயிற்சி நிலையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 29, 2024 11:19 PM
பெ.நா.பாளையம்: கோவை மேட்டுப்பாளையம் ரோடு, பெண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இங்கு பெண்கள் சேர வயதுவரம்பு இல்லை. பயிற்சி கட்டணம் இலவசம். எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், தகவல் தொழில்நுட்பம், மருத்துவ மின்னணுவியல், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டெஸ்ட் டாப் பப்ளிஷிங் ஆப்ரேட்டர், தையல் வேலை தொழில்நுட்பம், ஸ்மார்ட் போன் டெக்னீசியன் மற்றும் ஆப் டெஸ்டர் ஆகிய தொழில் பிரிவுகளில் ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடம் வரை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
குறைந்தபட்ச கல்வி தகுதி, 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் சேர மாற்றுச் சான்றிதழ், 8 மற்றும், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 5 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியாக விண்ணப்பிக்க, இதே தொழில் பயிற்சி மையத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு பயிற்சியில் சேரும் பெண்களுக்கு மாதம், 750 ரூபாய் உதவி தொகை, இலவச பஸ் பாஸ், சீருடை, தையல் கூலி, பாட புத்தகம், காலணி, சைக்கிள், வரைபட கருவிகள், புதுமைப்பெண் திட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று முதன்முறையாக உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வளாக நேர்காணல் வாயிலாக வேலை வாய்ப்பு, பயிற்சியாளர்களின் உடல், மனநலத்துக்காக இலவச கண் பரிசோதனை, மருத்துவ முகாம், புத்தாக்க பயிற்சி, யோகா பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
பயிற்சியில் சேர, www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.