/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜி.டி.ஆர்., பள்ளிகளை நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு
/
ஜி.டி.ஆர்., பள்ளிகளை நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 02, 2024 02:03 AM
ஊட்டி;கூடலுாரில் உள்ள ஜி.டி.ஆர்., பள்ளிகளை நடத்துவதற்கு தொண்டு நிறுவனங்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, கூடலுார் வட்டத்தில், 2024-25ம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லும் மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான, கூடலுார் கோழிக்கொல்லி உண்டு உறைவிட பள்ளி, அம்பல மூலா வட்டக்கொல்லி உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
உண்டு உறைவிட பள்ளிகள் நடத்துவதற்கு அனுபவம் மற்றும் ஆர்வம் உள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களில் இருந்து, கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், 5ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிபந்தனைகள்
பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான கல்வி பணியில் அனுபவம் கண்டிப்பாக பெற்று இருக்க வேண்டும். உள்ளூர் பண்பாடு, மொழி, மற்றும் சமூக பொருளாதார நிலைகளை, நன்கு தெரிந்த அனுபவமுள்ள போதுமான களப்பணியாளர்களை பெற்றிருக்க வேண்டும்.
தேசிய அறக்கட்டளை சட்டம் மற்றும் சமூக பதிவு சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். தொண்டு நிறுவனம் சுயநிதி குழுவின் வரவு செலவு சார்ந்த ஆண்டு தணிக்கை விவரங்களை வைத்திருக்க வேண்டும். நிதிநிலை விவரங்கள் திருப்திகரமாக இருக்க வேண்டும்.
தொண்டு நிறுவனம், நிலைத்தன்மை உடையதாகவும், நீண்ட கால உதவி அளிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய சமூக நல வாரியத்தால், கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 9788859001, 9788859009 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.