மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முதன்மை பயிற்றுநர்கள் நியமனம்
மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முதன்மை பயிற்றுநர்கள் நியமனம்
ADDED : ஜூன் 01, 2026 06:00 PM

ஊட்டி: ஊட்டி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்வது தொடர்பான பயிற்சி வகுப்பினை, கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார்.
கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது:
கடந்த, 1872ம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, நடக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின், 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மற்றும் சுதந்திரத்திற்கு பிறகு நடைபெறும், 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாகும்.
நீலகிரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டமாக வீடுகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்வது தொடர்பாக நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளுக்கு, கணக்கெடுப்பு பணி முதன்மை பயிற்றுநர்களாக நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் அனைத்து தாசில்தார்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பணியில் ஈடுபட உள்ள கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் இந்த பயிற்சி வகுப்பினை நன்றாக பயன்படுத்தி கொண்டு, நமது மாவட்டத்தில் எந்தவொரு தனிநபரும் விடுபடாமல் கணக்கீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,’’ என்றார்.
