/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாராட்டு விழா ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் குன்னுாரில் பாராட்டு விழா
/
பாராட்டு விழா ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் குன்னுாரில் பாராட்டு விழா
பாராட்டு விழா ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் குன்னுாரில் பாராட்டு விழா
பாராட்டு விழா ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் குன்னுாரில் பாராட்டு விழா
ADDED : மே 09, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார், : குன்னுார் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் நல சங்கம் சார்பில், ஓய்வு பெற்ற மற்றும் விருது பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
குன்னுார் வட்டார கல்வி அலுவலர் யசோதா தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, பட்டதாரி ஆசிரியர் பாபு ஆகியோர் கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் ராஜேஸ்வரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ராமச்சந்திரன், மனோகரன், சங்க பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். சங்க தலைவர் ரமேஷ் குமார் வரவேற்றார்.