/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொது தேர்வுகளில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு
/
பொது தேர்வுகளில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : மே 19, 2024 11:19 PM

பந்தலுார்;அரசு பொது தேர்வுகளில் சாதித்த மாணவிகளுக்கான பாராட்டு விழா பந்தலுார் அருகே உப்பட்டியில் நடந்தது.
எம்.எஸ்.எஸ்., பள்ளி துணை முதல்வர் ருக்மணி வரவேற்றார். டாக்டர் அப்துல் கலாம் அன்னை தெரேசா அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சூசைராஜ் தலைமை வகித்து பேசினார்.
பள்ளி முதல்வர் கவிதா பேசுகையில், ''சமீப காலமாக அரசு பொதுத்தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகளில் மாணவிகள் தடம் பதித்து வருவது பாராட்டுக்குரியது.
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி காணும் பெண்கள், தற்போது அரசு பொது தேர்வுகளில் சாதித்து, பந்தலுார் தாலுகாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்,'' என்றார்.
தொடர்ந்து, அரசு பள்ளி அளவில் பிளஸ்-1 பொது தேர்வில், 578 பெற்ற பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி இலக்கியா, 10 வகுப்பு பொது தேர்வில், 488 மதிப்பெண்கள் பெற்ற எம்.எஸ்.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவி விஷ்ணு பிரியா ஆகியோருக்கு அறக்கட்டளை சார்பில் கேடயம் வழங்கப்ட்டது. நிகழ்ச்சியில், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

